Thursday, November 14, 2013

நியூயார்க்கில் ஸ்ரீரங்கநாத பெருமாள் ஆலயம்..
அமெரிக்காவின் நியூயார்க்கில் போமோனா பகுதியில் அமைந்துள்ளது திருவரங்கன் எனப்படும் ஸ்ரீ ரங்கநாத பெருமாள் ஆலயம்.இக்கோயிலின் மகா சம்புரோக்ஷனம் 2001-ம் ஆண்டு மே மாதம் 27-ம் தேதி மிகப் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. எட்டு சன்னதிகளைக் கொண்ட இக்கோயிலில் ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள் முக்கிய தெய்வமாவார். ஆழ்வார்- ஆச்சாரியர் பிறந்தநாள்,பிரம்மோற்சவம், பவித்ரோற்சவம் மற்றும் அன்னதானங்கள் ஆகிய விழாக்கள் இக்கோயிலில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. காலை 8 மணிக்கு அனைத்து சன்னதிகளிலும் விஷ்வரூப தரிசனம் எனப்படும் திருப்பள்ளி எழுச்சி மற்றும் சுப்ரபாத சேவைகளும், 8.30 மணிக்கு வேத பாராயணம், அஷ்டோத்ர நாம அர்ச்சனை உட்பட அனைத்து ஆராதனைகளும், 10 மணிக்கு நட்சத்திரங்களின் படி திருமஞ்சனமும், 11 மணிக்கு உச்சிகால ஆராதனையும், மாலை 6 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாமம் மற்றும் பிரபந்த பாராயணங்களும், 7 மணிக்கு சாய ஆராதனை எனப்படும் விஷ்ணு சகஸ்ரநாமம் மற்றும் மகாலட்சுமி அர்ச்சனையும், 8 மணிக்கு சயனோட்சவமும் (வெள்ளிக்கிழமைகளில் காலை 9 மணிக்கு) நடைபெறுகிறது.
முக்கிய தெய்வங்கள்: பெருமாள்,மகாலட்சுமி, ஆண்டாள்,முருகன், ராமர், விநாயகர், கிருஷ்ணர், நரசிம்ம பெருமாள் ஆகிய தெய்வங்களின் சன்னதிகள் இக்கோயிலில் அழகுற உருவாக்கப்பட்டுள்ளன.
முக்கிய விழாக்கள்: பிரமோற்சவம், ராம நவமி,பங்குனி உத்திரம், கிருஷ்ண ஜெயந்தி, வரலட்சுமி விரதம், நரசிம்ம ஜெயந்தி, மார்கழி மகா உற்சவம், ஸ்ரீநிவாச திருக்கல்யாணம் போன்ற விழாக்கள் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகின்றன.
கோயில் முகவரி : Sri Ranganatha Seva Samithi Inc.,
( Regd. Non-Profit, Tax-Exempt, Religious Organization )
8-Ladentown Road, Pomona, NY-10970. USA. தொலைப்பேசி : 845-364-9790. இணையதள முகவரி : www.ranganatha.org

No comments:

Post a Comment