Thursday, November 14, 2013

கந்தன் போட்ட கணக்கு
தெரிவதில்லை நமக்கு
வேலன் போட்ட கணக்கு
புரிவதில்லை நமக்கு. (க).
...
ஒன்றும் ஒன்றும் இரண்டு
ஓம் எழுத்தும் இரண்டு
இரண்டும் இரண்டும் நான்கு
இனிய வேதம் நான்கு. (க).

மூன்றும் மூன்றும் ஆறு
முருகன் முகம் ஆறு
நான்கும் நான்கும் எட்டு
நமக்குத் திசைகள் எட்டு. (க).

ஐந்தும் ஐந்தும் பத்து
அவன் அருள் பெரும் சொத்து
மைந்தன் என்றால் காத்து
மகிழ்வைத் தருவான் பார்த்து. (க).

சுப்பன் போட்ட கணக்கில்
தப்பு ஏதுமில்லை!
கணக்குப்படி நடந்தால்
பிணக்கு ஏதுமில்லை. (க).

எனக்கு அவனும் சொன்னான் உனக்கு நானும் சொன்னேன்
அனைத்தும் அவரே என்றால்
மனத்துயரைத் தீர்ப்பான். (க).

No comments:

Post a Comment